மடகாஸ்கர் தீவில் இருக்கும் Baobab (பாவோபாப்) மரங்கள் தான் உலகில் மிகப்பெரிய மரங்கள். உயரத்தில் அல்ல, சுற்றளவில். இந்த மரங்களின் உயரம் 15 – 98 அடி வரை இருக்கும்.
ஆனால், மரத்தின் சுற்றளவும் அதிகபட்சமாக 154 அடிகள் இருக்கும். இவற்றின் அதிசயம் என்னவென்றால், மரத்தின் அடிப்பகுதி மூங்கில் போல் வெற்றிடம் கொண்டதாகவும், அந்த வெற்றிடத்தில் நீர் நிறைந்தும் இருக்கும். ஒரு பெரிய Baobab மரத்தில் 1,20,000 லீற்றர்கள் நீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கோடை காலங்களில் இந்த நீர் ஆவியாக மாறிவிடாமல் மரங்களே பாதுகாக்கின்றன.
மடகாஸ்கர் தீவிலிருக்கும் மக்கள் வறட்சிக் காலங்களில் இம்மரங்களிலிருக்கும் நீரை அருந்துகின்றனர். மரங்கள் இறந்துவிட்டால், அடிப்பகு தியைத் தண்ணீர் சேமித்து வைக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1000 வருடங்கள் பழமையான மரங்கள் இத்தீவில் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும், அதை நிரூபிக்க ஆதாரம் ஏதும் இல்லை. ஏனென்றால், மரங்களின் வயதைக் கணக்கிடும் growth rings பாவோபாப் மரங்களில் கிடையாது.