68
துன்பங் கொண்டு
துவண்டு விடாதே!
தடைகள் வந்தாலும்
தடுக்கி விடாதே!
காயம் கண்டு
கலங்கி விடாதே!
சோம்பல் பிடித்து
சோர்ந்து விடாதே!
சோதனைப் பாதையில்
சறுக்கி விடாதே!
மாற்றான் பேச்சில்
மயங்கி விடாதே!
நடந்ததை நினைத்து
நகராமல் நின்றுவிடாதே!
முடியாதென எண்ணி
முடங்கி விடாதே!
மோக உலகில்
மயங்கி விடாதே!
இலட்சிய வேட்கையை
இழந்து விடாதே!
தோல்விக்கு பயந்து
தோற்று விடாதே!
விடாமுயற்சியை வாழ்வில்
விட்டு விடாதே!
விமர்சனங்களை கண்டு
விலகி விடாதே!
இதை நம்பிக்கையில் என்றும்
அவநம்பிக்கை கொள்ளாதே!