இலங்கையில் Dulux பெயின்ட் தயாரிப்பாளர்களான AkzoNobel பெயின்ட்ஸ் நிறுவனம், பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட Colour of the Year: Sweet Embrace’ தெரிவை அறிமுகம் செய்துள்ளது. pastel pink வர்ணத்தில், மென்மையான இறகுகள் மற்றும் மாலை முகில்களின் வர்ணத்தை ஒத்ததாக அமைந்துள்ள இந்த ஆண்டின் வர்ணத் தெரிவு, அமைதியான மற்றும் வரவேற்பு மிகுந்த பகுதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.
2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச சமூக, அலங்கார மற்றும் நுகர்வோர் போக்குகள் தொடர்பான ஆழமான ஆய்வின் பிரகாரம், இந்த வரவேற்பை கொண்டுள்ள வர்ணமானது, நிலையில்லாத உலகில், எம்மை உரித்தாயிருப்பதற்கு செய்ய எதிர்பார்க்கும் நிலையில் இந்த வர்ணம் வரவேற்பை பெற்றதாக அமைந்திருப்பதை கண்டறிந்தோம். வீட்டில் ஆரம்பித்து, எமது தனிப்பட்ட நினைவுகள் மற்றும் உறவுகளை “விசேடமான ஏதேனுமொரு பகுதியில்” கொண்டிருப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
AkzoNobel’இன் உள்ளக பெயின்ட்கள் மற்றும் மேற்பூச்சுகள் நிபுணர்கள் மற்றும் சர்வதேச அலங்கார நிபுணர்கள் ஆகியோர், Sweet Embrace மற்றும் அதன் பிரத்தியேகமான வர்ணத் தெரிவுகள் போன்றன இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உதவியாக அமைந்திருக்கும் என கருதுவதுடன், எதிர்வரும் ஆண்டில் நாம் எவ்வாறு வசிப்போம் என்பதில் நேர்த்தியான தாக்கத்தை செலுத்துவதாகவும் அமைந்திருக்கும் எனவும் கருதுகின்றனர்.