நடிகர் ரஜினிகாந்த், த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சன், ராணா, ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார், ரஜினிகாந்த். அவரின் 171-வது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது. ‘ஜெயிலர்’ படத்தைப் போல இதிலும் ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒரு நடிகரை நடிக்க வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கவுரவ வேடத்தில் நடிக்க ஷாருக்கானிடம் கேட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் அவரைச் சந்தித்துப் பேசிய தாகவும் ஆனால், அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரன்வீர் சிங்கிடம் அவர் பேசியுள்ளார். இதில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் முழு கதையையும் அவர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின், ‘2.0’ படத்தில் இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்தார். ‘பேட்ட’ படத்தில் நவாஸுதின் சித்திக் வில்லனாக நடித்திருந்தார். ‘வேட்டையன்’ படத்தில் அமிதாப்பச்சன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ரஜினியின் 171-வது படத்தில் ரன்வீர் சிங்கும் கவுரவ வேடத்தில் நடிப்பார் என்கிறார்கள்.
ரஜினியின் 171-வது படத்தில் ரன்வீர் சிங்
96
previous post