வண்ண நிலா வானத்திலே வன்முகத்தை காட்டும்….
வாசலிலே மரம் கொடிகள் ஓவியங்கள் தீட்டும்…..
எண்ணமெல்லாம் எங்கெங்கோ எட்டி நடை போடும்….
ஏட்டினிலே எழுதுகோலும் கவிபுனைய நாடும்…!!
இளையநிலா என் மீது எறியும் நிலா…
இனிய நிலா இளையோரின் வசந்த நிலா….
மழை போல மண் மீது பொழியும் நிலா…
மழலைகளின் கண்களுக்கும் சொரியும் நிலா.!!
பாடும் நிலா பாவையர்கள் தேடும் நிலா….
பாசாங்கு பண்ணும் நிலா பாவலர்கள் நாடும் நிலா…..
ஓடும் நிலா உடல் மறைத்து உருகும் நிலா….
ஒதுங்கும் நிலா இதயங்களில் தேன் ததும்பும் நிலா..!!
பூவில் நிலா புதுக்கவிகள் புனையும் நிலா….
பூ விழிகள் நனையும் நிலா…
புன்னகையில் தெரியும் நிலா….
பாவில் நிலா பல கதைகள் சொல்லும் நிலா…..
பாலில் நிலா பழக்கலவை தோய்த்த நிலா.!!
கற்பனையில் பருகும் நிலா…
கற்கண்டு பாகு நிலா…
புற்தரையில் புகுந்த நிலா….
பூமியில் முத்தம் பதித்த நிலா.!!
மேகத்திரையில் முட்டும் நிலா…
முழுமதியாய் மனதில் நிறைந்த நிலா…
தாகம் தணித்த நிலா தரணியில் வென்ற நிலா…
சோகம் களைந்த நிலா சோலைக்குள் புகுந்த நிலா..!!