நடிகர் சிவகார்த்திகேயன், இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது 21-வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதத்துக்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் காட்சிகள், இணையத்தில் கசிந்துள்ளது. சாய்பல்லவி மற்றும் அவர் குழந்தை, சிவகார்த்திகேயனுக்காக காத்திருப்பது போல அந்தக் காட்சிகள் உள்ளன. இதற்கிடையே, இந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.