தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை சமந்தா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தற்போது சினிமாவில் கமிட் ஆகாமல் ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், சமந்தா அவர் தொடங்கியிருக்கும் ஒரு புதிய பயணத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். பல பிரபலங்கள் சமந்தாவிற்கு ஆதரவாக கமெண்டுகள் பதிவிட்டு வருகிறார்கள். என்ன பண்ண போகிறார் சாம் ?நடிகை சமந்தா படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் ப்ரத்யுஷா என்னும் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 2012ல் ப்ரத்யுஷா தொண்டு நிறுவனத்தை தொடங்கிய சமந்தா அதன் மூலம் பல குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உதவிகளை செய்து இருக்கிறார். முன்னதாக சமந்தாவின் மருத்துவ நண்பர்களான மூன்று பேரை வைத்து மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தார். அதன் பிறகு தொடர்ந்து இந்தப் ப்ரத்யுஷா தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு நேரங்களில் பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார் இப்போதும் செய்து வருகிறார்.நடிகை சமந்தா நடிப்பது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளை ப்ரத்யுஷா நிறுவனத்தின்மூலம் செய்து வருவது மட்டுமல்லாமல் சகி என ஒரு ஆடை நிறுவனத்தையும் தொடங்கினார். 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சகி வேர்ல்ட் என்னும் கிளாத்திங் பிராண்டுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. சினிமா மட்டுமல்லாது பிசினஸிலும் ஆர்வம் கொண்ட சமந்தா இப்போது ஒரு புதிய முன்னெடுப்பை கையில் எடுத்திருக்கிறார்.
சமந்தாவின் புதிய பயணம்
50