69
உடற்பயிற்சி செய்திட்டால்
உடலும் உறுதியாகிடுமே
உடலும் உறுதியானாலே
உலகில் நெடுநாள் வாழலாமே!
காலை மாலை தவறாமல்
கவனத்துடனே உடற்பயிற்சி
காலமெல்லாம் பழகிட்டால்
களிப்பாய் நாமும் வாழலாம்!
இளமையான வயது முதல்
இனிதாய் பயிற்சி செய்துவரின்
வலிமையான உடலோடு
வாழ்ந்து சாதனை புரிந்திடலாம்!