அண்டாட்டிகா, உலகிலிருக்கும் எந்த நாட்டிற்கும் சொந்தமானதில்லை. யாரும் இது எங்களுடையது என்று உரிமை கொண்டாட முடியாத இடம். உலகிலுள்ள மொத்த பனிக்கட்டிகளில் 90 சதவீதம் இங்குதான் உள்ளது. இந்த 90% பனிக்கட்டிகளில் 70% குடிநீரும் அடங்கும். இங்கிருக்கும் அத்தனை பனிக்கட்டிகளும் உருகினால் கடல் நீரின் மட்டம் 200 அடி உயர வாய்ப்புள்ளது.
அண்டாட்டிகா பனிக்கட்டிகளால் நிரம்பியிருந்தாலும், இது ஒரு பாலைவனம். வருடத்திற்கு இரண்டு அங்குலம் மழை பொழிவதே அபூர்வம். ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலைவனமான கோபி பாலைவனத்தைவிட அண்டாட்டிகாவில் ஈரப்பதம் மிகக்குறைவு. இங்கிருக்கும் ICE Fish என்று அழைக்கப்படும் மீன்களின் உடல்களில் ஹீமோகுளோபின் கிடையாது. பனியில் உறைந்துவிடாமலிருக்க, இவற்றின் உடலில் antifreeze எனப்படும் உறைதலைத் தடுக்கும் தன்மை இருக்கிறது.