நாட்டின் முன்னணி நுகர்வோர் இலத்திரனியல் விற்பனையாளரான Singer Sri Lanka PLC மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Blade V50 Design உள்ளிட்ட சமீபத்திய ZTE ஸ்மார்ட்ஃபோன்களை ஃபிளாக்ஷிப் மாடலாக அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது.
‘The Smarter Choice’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வு, தொழில்நுட்ப வல்லமையின் துடிப்பான கண்காட்சியாக அமைந்ததுடன், சிறந்த உலகளாவிய கண்டுபிடிப்புகளை இலங்கை சந்தையில் கொண்டு வருவதற்கான சிங்கரின் அர்ப்பணிப்பிற்கோர் சான்றாகவும் அமைந்தது.
ZTE Blade V50 DESIGN மாடல், அதன் சிறந்த வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் தனிசிறப்பானதோடு, ZTE Blade V73 மற்றும் கேமிங்கை மையமாகக் கொண்ட ZTE Nubia Neo 5G மாடலுடன் 128GB மற்றும் 256GB வரையிலான தனித்தன்மையையும் கொண்டுள்ளது.
புதிய வரிசையில் உள்ள ஒவ்வொரு தொலைபேசியும் இலங்கை நுகர்வோரின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் செயல்பாடு, பாணி மற்றும் மலிவு விலையில் தேவைக்கேற்ற விதத்திலும் அமைந்துள்ளது.
ZTE Blade V50 DESIGN ஆனது அதன் புத்தம் புதிய தோற்றத்துடன் 6.82-இன்ச் FHD+ டிஸ்ப்ளே, உயர் செயல்திறன் கொண்ட RAM மேம்பட்ட ஆக்டா-கோர் செயலி மற்றும் பல லென்ஸ் கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.