ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு விருது வழங்கல் விழா எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கல்கிஸை ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
24ஆவது தடவையாக நடத்தப்படும் இந்த வருடாந்த ஊடகவியலாளர் விருது வழங்கல் விழாவை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இவ்விழாவில் 36 ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன், 16 ஊடகவியலாளர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அத்துடன், பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றி வரும் ஊடகவியலாளர்கள் 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. ஸ்டான்லி சமரசிங்க, எப்.எல்.டீ.மஹிந்தபால, சீதா றஞ்சனி, எஸ்.தில்லைநாதன் மற்றும் ஏ.எல்.எம்.நிலாம் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ் பத்திரிகைகளின் ஆலோசகராக இருந்த ஏ.எல்.எம்.நிலாம் மற்றும் தினகரன் பத்திரிகையின் கரவெட்டி நிருபராக இருக்கும் எஸ்.தில்லைநாதன் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.