ரோஜாவின் முதல் படமான செம்பருத்தி படத்தில் நடித்த போதே அந்த படத்தின் இயக்குனர் ஆர்.கே. செல்வமணிக்கும் அவருக்கும் காதல் பத்திக்கிச்சு. இதை அடுத்து ரோஜாவை வைத்து ஆர்கே செல்வமணி ஒரு சில படங்களை இயக்கி, அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
கடந்த 1999ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார்.
10 வருடத்திற்கு பிறகு அந்த கட்சியை விட்டு விலகி, ஓய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ரோஜா, ஆந்திராவில் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.
இவருக்கு மொத்தமாக 80 கோடி சொத்துக்கள் உள்ளது. அதிலும் ஹைதராபாத் மற்றும் சென்னையில் அரண்மனை போல் வீடு உள்ளது. ரோஜா தனது 50 வது பிறந்தநாள் அன்று ஹோம் டூர் வீடியோவை போட்டு பலரையும் வாயடைக்க வைத்தார். அது மட்டுமல்ல இவரிடம் ஆடம்பரமான சொகுசு கார்களும் உள்ளன.