கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் நயன்தாரா கடந்த நவம்பர் 18ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு விக்னேஷ் சிவன் 4 கோடி விலை உயர்ந்த காரை பரிசளித்து ஆச்சரியப்படுத்தினார். இப்படி எல்லாம் செய்யும் விக்னேஷ் சிவன் எதற்கு நயன்தாராவின் சினிமா கேரியரை கண்டம் ஆக்குகிறார் என ரசிகர்கள் இப்போது கொந்தளிக்கின்றனர்.
ஏனென்றால் விக்னேஷ் சிவனின் புதிய படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பட்ஜெட் அதிகம் என்பதால் இப்போது அந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு சென்றுள்ளது. இந்த படத்தில் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக நடிக்க வைக்கிறார்.இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்ஜே சூர்யா, மிஸ்கின், யோகி பாபு போன்றவர்களும் இணைந்து நடிக்கின்றனர். ஆனால் இப்போது ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் ஹீரோயினுக்கு அக்காவாக நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.