பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, கே.சுஜித் சஞ்ஜய பெரேரா, ரோஹண பண்டார ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுக்கான தடை விதிக்கும் பிரேரணை 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான இம்மூவருக்கும் பாராளுமன்ற அமர்வுக்கு தடை விதிப்பது தொடர்பான தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பிரேரணைக்கு ஆதரவாக 56 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தன. 3 பேர் பிரேரணை மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தனர்.
கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கே.சுஜித் சஞ்ஜய பெரேரா, ரோஹண பண்டார ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் விதந்துரைப்புகளை செயற்படுத்துதல் தொடர்பான பிரேரணை நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போதே, 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய, இந்த உறுப்பினர்களின் பாராளுமன்ற சேவை 2023 டிசெம்பர் 2ஆம் திகதியிலிருந்து ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தி வைக்கப்படும்.