AIA ஸ்ரீலங்கா 2023 இற்கான LMD இன் இலங்கையில் மிகச்சிறந்த மதிப்பிற்குரிய 25 நிறுவனங்கள் தரவரிசையில் இடம்பிடிப்பதோடு, மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்கள் 2023 இலும் தனது நாமத்தைப் பதித்து இலங்கையின் மிகச்சிறந்த மதிப்பிற்குரிய காப்புறுதி நிறுவனமாக உறுதியான அடித்தளம், வலுவான நற்பெயர் மற்றும் பெரிய மனதுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம், அர்ப்பணிப்பு, நம்பிக்கை, ஒருமைப்பாடு, பொறுப்புக் கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான முடிவுகளை சரியான நபர்களுடன் சரியான வழியில் மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை நிறுவனத்தின் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரட்டப்பட்ட பயணத்தின் விளைவாகும்.
2023 ஆம் ஆண்டிற்கான மிகவும் மதிப்பிற்குரிய காப்பீட்டு நிறுவனமாக AIA அங்கீகரிக்கப்பட்டதானது தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் நிறுவனத்தின் மீது வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் விசுவாசத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாக வைத்து அவர்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயற்பாடுகளிலும் AIA இன் அர்ப்பணிப்பை இந்த கௌரவம் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. நிறுவனத்தின் காப்புறுதித் திட்டங்களானது வெறுமனே காப்பீடுகளாக மட்டுமின்றி அதிகமான அனுகூலங்களுடன் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையினால் நிறுவனத்தின் அணுகுமுறையானது வழிநடத்தப்படுகின்றது.
இது மக்களின் எதிர்காலம் பற்றிய கனவுகளைப் பாதுகாப்பது, அவர்களுக்கு மன நிம்மதியினை வழங்குவது மற்றும் மக்கள் ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன் மற்றும் சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்குப் பெரிதும் உதவுவதாகவே அமைகின்றது.
அனைவரினதும் வாழ்க்கையில் நேர்மறையான பிரதிபலிப்பை ஏற்படுத்துவதற்காக மிகச்சிறந்த, புதுமையான மற்றும் பெறுமதியினை வழங்குவதற்கான அர்ப்பணிப்பில் AIA மிகவும் உறுதியாகவே செயற்படுகின்றது.