ஊருக்கான
கடைசி ரயிலை
ஒரு செக்கனில்
ரயில்
நிலையத்தில் வைத்து
தவற விடுபவன்
ஒரு யாசகனுக்கு
பிச்சை கொடுக்கும்
கணங்களிடையே
தவற விட்டிருக்கலாம்
அன்றி தடுக்கி விழுந்த
ஓரு வயது முதிந்தவரை
தூக்கி விடும்
சிறு கணத்தில்
தவற விட்டிருக்கலாம்
இன்னுமொரு
பயணியின்
தொலைந்த
பயணச் சீட்டை
தேடிக் கொண்டிருந்த
நேரத்திலும்
தவற விட்டிருக்கலாம்
தனது பிரியமான
குழந்தைக்கு
ஒரு பொம்மை ரயிலை
வாங்கும்
கணங்களிடையும்
தவற விட்டிருக்கலம்
தேநீர் அருந்தி விட்டு
அதற்கான பணத்தை
பதற்றத்தில்
கொடுக்க மறந்து
திரும்பிச்
சென்று கொடுக்கும்
கணத்தில் கூட
தவற
விட்டிருக்கலாம்
தனது ரெயிலுக்கான
நேர
அட்டவணையினை
விளம்பரப் பதாகையில்
தேடிக் கொண்டிருக்கும்
கணங்களில்
தவற விட்டிருக்கலாம்
இறுதியாக
மனைவியிடம்
வந்த அழைப்புக்கு
பதில் சொல்லும்
கணத்தில் கூட
ரயிலை தவற
விட்டிருக்கலாம்
எப்போதாவதொரு
தடவை
தவற விடுவதைக்
கூட ஏற்பதில்லை
ஏமாற்றங்களை
தாங்கொணா மனம்
இருந்தும்
தவிர்க்க முடியாது
இடைக்கிடை நிகழும்
தவற விடுதல்களை
நல்லதற்கென்று
நினைத்து
மனதை
ஆற்றுவதை தவிர
வேறென்ன
செய்ய முடியும்
தவற விடுதல்
619