அஜித் நடிப்பில் கடைசியாக ‘துணிவு’ படம் ரிலீசானது. இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார் அஜித். இப்படத்தின் ஷுட்டிங் கடந்த சில வாரங்களாக அஜர்பைஜானில் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.அஜித் நடிப்பில் தற்போது ‘விடாமுயற்சி’ படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்து வருகின்றனர். இப்படம் துவங்குவது தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்த நிலையில், சமீபத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷுட்டிங் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கடந்த பொங்கல் வெளியீடாக அஜித்தின் ‘துணிவு’ படம் ரிலீசானது. எச். வினோத் இயக்கியிருந்த இப்படத்தின் ரிலீசுக்கு முன்னரே ‘ஏகே 62’ பட அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனாலும் படம் துவங்குவது தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இதனால் ரசிகர்கள் கடுமையாக அப்செட் ஆனார்கள். இதனிடையில் ‘ஏகே 62’ படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி கமிட் ஆனார்.இந்நிலையில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் ‘விடாமுயற்சி’ டைட்டில் வெளியானது. ஆனாலும் படப்பிடிப்பு துவங்கவில்லை. தொடர்ந்து படம் துவங்குவது தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இதனிடையில் ‘விடாமுயற்சி’ படம் டிராப் ஆனதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் ஒரு வழியாக அண்மையில் ‘விடாமுயற்சி’ பட ஷுட்டிங் அஜர்பைஜானில் துவங்கியது. இதற்காக நடிகர் அஜித் உட்பட படக்குழுவினர் அங்கு சென்றனர். முழு படப்பிடிப்பும் கேப்பே இல்லாமல் அஜர்பைஜானில் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையில் தற்போது ஷுட்டிங்கில் இருந்து நடிகர் அஜித் திடீரென சென்னை திரும்பியுள்ளனர். இதுதொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.விடாமுயற்சி’ ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் திடீரென நடிகர் அஜித் அங்கிருந்து சென்னை திரும்பியுல்ளத்தால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது’ லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் திரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்டோர் அஜித்துடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென சென்னை திரும்பிய ஏகே
56
previous post