140
மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் காணப்படும் இந்த வேர்ப்பாலம் இறப்பர் மரத்தின் வேர்களால் உருவானது.
மேகாலயாவின் பழங்குடியினரான ‘வார்-காசிஸ்’ மக்கள்தான் முதன் முதலில் இந்த வேர்ப்பாலத்தின் மூலம் ஆற்றை கடக்க ஆரம்பித்தனர்.
இதன் பின்னர் இப்பகுதி மக்கள் இறப்பர் மரங்களில் செயற்கையாக வேர்ப்பாலங்களை உருவாக்க தொடங்கினர்.
அதாவது பாக்கு மரத்தின் தடித்த பாகத்தை துளையிட்டு அதில் இறப்பர் மர வேர்களை நுழையச்செய்து அது அப்பக்கம் வளர்ந்து சென்ற பிறகு மண்ணுக்குள் செல்கிறது. இதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
அதன் பிறகு பயணிக்க தகுதியான, உறுதியான வேர்ப்பாலமாக இது மாறிவிடும்.