சின்ன சின்னதாய்
சிணுங்கி வந்து நீ…
சில்லென காற்றும்
அள்ளி வந்து மேனி.. எங்கும்
உரசி செல்லும்போதும்.
உதிரத்தில் ஏனோ உற்சாகம்.
துள்ளிக்குதித்து …..
கால்கள் ரெண்டும்..
உயரப் பாய்ந்து …
கைகளினாலே
தட்டி விளையாடும் ….
போதினிலே…….!
தத்தித்தாவுது உள்ளமெல்லாம்…
குழந்தை போலே…..
அடடா மழையே உன்னாலே.
கோபம் கொண்டவன் ….
உள்ளம் போலே..
இருட்டி வந்த உந்தன் மேகம்…
சண்டை கொண்டு ….
மின்னல் வந்ததால்…
இடி சத்தம் கொண்டு ….
இம்சை செய்கிறாய்.!– இதனால்
இயற்கையும் உன்னால் ….
அதிர்ந்து போகிறது.
இதயமும் சில நேரம் ….
நின்று போகிறது.
அடடா மழையே!
குடை கொண்டு …
மெல்ல நடை போட்டு…
கடை சென்று …..
வருவதற்கு இடையில்..
நல்ல உடையெல்லாம்..
புயல் காற்றோடு நீ வந்து..
புடை சூழ்ந்து செல்கின்றாய்….
இதுதானா உன்னோடு….
வீர விளையாட்டு…
பள்ளமெல்லாம் …
வெள்ளம் கொண்டு …
நீரோடும் போது..
உள்ளமெல்லாம் தட்டுத் தடுமாறி…
தவித்துத்தான் போகிறது…
தங்குமிடமெல்லாம் …..
தவிடு பொடியாக்கி…
விடுவாயோ என்று.!
தரை மீது நீ விழும் போது..
வரமா? சாபமா ?
யாரறிவார்….
அடடா மழையே…!
179
previous post