வலிய வந்து கதைப்பாள்….
வாய் நிறைய சிரிப்பாள்….
நேர்த்தியாய் உடுத்திக் கொண்டு
நெளிய நெளிய நடப்பாள்….
அன்பை அள்ளித் தருவாள்….
அழகில் மயங்கச் செய்வாள்….
கண்ணைக் கவர வைப்பாள்….
காதல் வலையில் வீழ்த்திடுவாள்…!
உண்ணப் பருகத் தருவாள்….
உள்ளங் காலில் சுளுக்கு எடுப்பாள்….
வர்ண ஜாலம் காட்டிடுவாள்….
வார்த்தைகளால் கவர்ந்திழுப்பாள்….!
சொக்கத்தங்கம் போலாவாள்…..
சிக்கி சிக்கித் தவிக்க வைப்பாள்……
மக்கு பிள்ளையாக்கி மடிமீது
போட்டிடுவாள்…..
மந்திரங்கள் பேசிப் பேசி
தந்திரமாய் வலை விரிப்பாள்…!!
பையில் இருக்கும் பணத்தைக் கேட்பாள்…
பக்குவமாய் பிடுங்கப் பார்ப்பாள்….
செய்வதறியாது திகைக்க வைப்பாள்….
செய்திகள் சொல்லி இனிக்கச் செய்வாள்…!
கட்டிய வீட்டை கேட்பாள்….
கடையையும் எழுதிக் கேட்பாள்…..
விரட்டியே வேலையை முடிப்பாள்…..
விண்ணுக்கும் கூட்டிப் போவாள்……!
ஓடிய காரைக் கேட்பாள்….
வீடியோ வருமென்று சொல்வாள்….
சூடிட நகை கேட்டழுவாள்….
செல்லமாய் சுகமும் தருவாள்…..!
பூவை பறிப்பது போல்
உறவுகளை பறிப்பாள்……
தேவை முடிந்த பி
ன் துரத்தி விரட்டுவாள்….
முள்ளு வலையில் சிக்காதே……!!!
மின்னுவதெல்லாம் பொன்னல்ல…..!!
முள்ளு வலையில் சிக்காதே
174
previous post