இலங்கையில் டியுலக்ஸ் பெயின்ட் வகைகளின் தயாரிப்பாளரான AkzoNobel பெயின்ட்ஸ் லங்கா (பிரைவட்) லிமிடெட், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் (VTA) புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், நாடு முழுவதையும் சேர்ந்த டியுலக்ஸ் பெயின்ட் பூச்சில் ஈடுபடும் மேற்பூச்சாளர்களுக்கு, “நிபுணத்துவ பெயின்ட் பூசல்” என்பதில் நிலை 3 தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
NVQ நிலை 3 சான்றிதழ் என்பது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த தகைமை வாய்ந்த பெயின்ட் பூச்சாளர்களுக்கு உதவும் வகையிலான நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப கற்கையை பெற்றுக் கொடுப்பதுடன், வெளிநாடுகளில் பணியாற்ற விரும்பினால் அதற்கு உதவும் வகையிலும் அமைந்துள்ளது.
பெயின்ட் மற்றும் மேற்பூச்சு வகைகளில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் AkzoNobel, பெயின்ட் பூச்சில் ஈடுபடுவோரின் நலன் மற்றும் திறனை மேம்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இலங்கையில் உறுதியான பெயின்ட் பூச்சாளர் சமூகத்தின் திறன்கள் விருத்தி, தன்னிறைவு மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையிலும் அமைந்துள்ளது. பிரத்தியேகமான “டியுலக்ஸ் பெயின்ட் பூச்சாளர்” வெகுமதி நிகழ்ச்சித் திட்டமும் இந்த நடவடிக்கையின் அங்கமாக அமைந்திருப்பதுடன், இந்த பெயின்ட் பூச்சாளர் குழுவிலிருந்து, இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கான பங்குபற்றுநர்கள் தெரிவு செய்யப்படுவர்.