509
வாசிப்பு வாழ்க்கையை
வளப்படுத்தும்
விதைகளை விருட்சமாக
மாற்றியமைக்கும்
விந்தைகள் படைக்க
வித்துக்களை விதைக்கும்
வீண் எண்ணங்களை விரட்டியொழிக்கும்
சொற்களுக்குள் சுவர்க்கம் கண்டிட
எழுத்தினால் ஏழ்வானங்களையும் எட்டிவிட
காகிதங்கள் கவலைகளை கரைக்க
மைவாசம் மெய்சிலிர்க்க வைக்க
அறியாததை
அரைநொடியில் அறிந்திட
அழியாத அனுபவத்தை அடைந்திட
அமைதியான அகத்தை அனுபவிக்க
ஆழ்கடலின் ஆழத்தையும் அளந்திட
நூல்களை உயிராக நேசி
நூலகங்களை உறவாக போசி
நுண்ணறிவை உயர்த்திட யோசி
நூற்றாண்டுகள் உயர்ந்திட வாசி