தெலுங்கு முன்னணி நடிகர்களுள் ஒருவரான ராம்சரண், இப்போது ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா முறையில் இந்தப் படம் உருவாகிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை ‘உப்பெனா’ படத்தை இயக்கிய புச்சிபாபு சனா இயக்குகிறார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியான நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ராம் சரண் ஜோடியாக சாய் பல்லவி?
284
previous post