ஆக்ஷன் காட்சியுடன் தொடங்கியது ‘நானி 32’நடிகர் நானி, நடித்துள்ள ‘ஹாய் நானா’ படம் டிச.1ம் தேதி வெளியாகிறது. இதில் மிருணாள் தாக்குர் நாயகியாக நடித்துள்ளார்.
நானியின் 31வது படத்தை, ‘அடடே சுந்தரா’ படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். டிவிவி என்டர்டெயின்மென்ட் சார்பில் டிவிடி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். படத்துக்கு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், நானிவித்தியாசமான முரட்டுத் தோற்றத்தில் நடிக்கிறார். பிரியங்கா மோகன் நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கின்றனர். முரளி ஜி. ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இது, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு ஆக்ஷன் காட்சியுடன் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. ஸ்டன்ட் இயக்குநர்களான ராம்ல-க்ஷ்மண் இதை வடிவமைக்கிறார்கள்.