278
நீண்டு போகும்
பாதையில் ஏதோ
எழுதிப் போகிறேன்
வலிகளை.
எழுத முடித்தவைகளைப்
பார்த்து
பரிதாபம் கொள்ளுகிறது
கண்ணீர்த் துளிகளைக் கொண்ட
வாழ்க்கை.
உறவாடிய உறவுகளை
களவாடிப் போனாது
என்னோடு விளையாடிய
பொழுதுகள்.
பத்திரமாய் பார்த்துக்
கொண்ட பாசக்காரி
பக்குவமாய் கூறிப்
போகிறாள் நான்
ஏழையென.
எழுந்து பறக்க
துடிக்கும் வைராக்கியம்
சிதைந்து கிடக்கும்
வாழ்வினைப் பார்த்து
சிறகுடைந்து கிடக்கிறது
இன்று வரை.
இதனால்தான் ஏதோ
புலம்பி கிறுக்கிறேன்
பித்தன் எனக்
கூறி.