அறிவியல் உலகில்
அறிவது அறமே
அடியொற்றிப் புதினங்கள்
படைத்திடல் வளமே
ஆய்ந்திடும் போதிலே
புதுமைகள் பிறக்குமே
ஆழமாய்க் கற்றிட
அறியாமை அகலுமே
ஆற்றலை வளர்த்திட
அறிவே துணையாம்
புதுக்கற்கைகள் நிகழ்த்திடப்
புத்தகங்கள் வழியாம்
மற்ற உயிர்களோடொப்பிட
இவ்வுலகில்
மானிடனே
அறிவிலுயர்ந்து சிறந்தான்
வையம் சுருங்கி
கரங்களில் குவியும்
ஐயமின்றி நாளும்
அருந்திடல் முடியும்
அலைக்கற்றை
மீதேறி ஞானமும்
வழிந்திடும்
அருகிலே சென்றிடக்
கடலாய் விரிந்திடும்
அன்று முதல் இன்று வரை
வளர்ந்து வரும்
மனிதனின் திறமை
ஆக்குந் திறனில் அசுர வளர்ச்சி
அசர வைக்கும் மனித முயற்சி
இறவாப்புகழில்
நிலையாய் நீடிக்கும் புலமை
எண்ணிப்பார்க்கவே
முடியாத எண்ணில் வலிமை
அறிவே அணையா
அகலாத் தீபம்
அணுவையும் பிளந்திட்ட
நல் பெருமை
ஆயினும் மனிதனின்
அடங்கா மனதில்
அந்தகாரம் குடிகொண்டு
பலமாய் ஆட்டுவிக்க
ஆயுத கலாசாரம்
உச்சத்தை அடைந்தது
அநியாய உயிரழிப்பு
அச்சத்தை வளர்க்குது
அணுவைப்பிளந்த
மனிதன் நெஞ்சத்தில்
அன்பு வற்றி வன்மம்
படையெடுத்தது
குழந்தைகளைக்
கொல்லும் குரூர புத்தி
குறைவின்றிக் கோரமாய்ப்
பெருக்கெடுத்தது
ஐயோ இந்த அவலம் ஏன்?
ஆத்திரம் கொண்டு
உயிர் குடிப்பதும் ஏன்?
ஆக்கிரமிக்கும்
அநீதிக்கு ஆதரவு ஏன்?
அனைவரும் இதனை
வேடிக்கை பார்ப்பது ஏன்?
அணுவையும் பிளந்திட்ட…
213
previous post