சீனங்கோட்டை
ஒன்பது வயதுச் சிறுமி
ஓயாமல் கைபேசியில்
பட்டினி தீர்க்க தாய்
பட்டணம் செல்ல
பாதியில் தந்தை
பரிதாபமாக விட்டுச் செல்ல
பாட்டியின் அரவணைப்பில்
பாதுகாக்கப்பட்ட பட்டாம்பூச்சி
படிப்பில் கெட்டிக்காரி
பதக்கம் வென்ற திறமைசாலி
விளையாட யாரும் இல்லை
வினையாகிப் போனது கைபேசி
செல்பேசி கேட்டு
சொல் பேச்சு கேட்காமல்
அடம் பிடித்தாள்
பாட்டியின் மறுப்பு
பாலகனின் மனதில் வெறுப்பு
அரை மணித்தியாலங்கள் கடந்தும்
அடைக்கப்பட்டிருந்த
அறைக் கதவு
தட்டிப் பார்த்தும்
திறக்கப்படவில்லை
தள்ளி உடைத்து
புகுந்தனர் உள்ளே
தூக்குக் கயிற்றில்
தொங்கினாள் சிறுமி
வைத்தியசாலை செல்ல
வைத்தியர்கள் கைவிரித்தனர்
தொலைபேசிக்கு அடிமையாகி
தொலைந்து போனவர்கள் பலர்
உயிரையே இழந்து
உலகையே விட்டு
போனாள் இவள்
பொடுபோக்கு வேண்டாம்
பொறுப்புகள் விசாரிக்கப்படும்
நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு
நீங்கள் தான் பொறுப்புதாரி
விழித்துக் கொள்ளுங்கள்
வீட்டுக்குள்ளேயே
உயிர்கொல்லி வீற்றிருக்கு
காசு போனால்
தேடிக் கொள்ளலாம்
கைத்தொலைபேசியினால்
உயிர் போனால்..!?
(அண்மையில் நடந்த
உண்மைச் சம்பவம்)
சிறுமியும் செல்பேசியும்
203
previous post