குளத்துகரையோரம்…..
குழி
தோண்டி விளையாடி..
ஆலமரத்து
கொடிகளிலே…
தொங்கித்தான்
ஊஞ்சலாடி..
நெஞ்சத்து
கவலைகள் எல்லாம்
தெரியாமல் கவி பாடி…
சந்தோசம் மட்டுமே
தெரிந்தது
அந்தக் காலம்….
கொய்யாக்காய்
குண்டு கொண்டு…
குழி தோண்டி
ஆடுமாட்டம்..
கும்பலாய்
நண்பர்கள் நின்று..
இறைச்சி கொப்பு
ஆட்டத்தினால்
அடி வாங்கி
ஓடும் ஓட்டம்.
கிட்டிப்புள்
ஆடும் போதும்..
கிடைத்திடுமே
ஆனந்தம்..
கிராமத்து
வாழ்க்கையிலே..
இப்படி ஒரு
சந்தோசம்…
மண்பானை
முட்டி சோறும்…
நல்ல தண்ணி
ஜப்பான் மீனும்..
விறகு அடுப்பில்
சமைத்தெடுத்து.
வெட்ட வெளியில்
பாய் விரித்து..
வந்தவரெல்லாம்
வயிறார…
உண்டு மகிழ்ந்தது
அந்தக் காலம்.
பூவரச இலையிலே
ஊதி செய்து ஊதியதும்.
தென்ன மர இலையிலே
விசிறி செய்து
ஓடியதும்..
இளம் பனங்காயில்.
வண்டி செய்து
உருட்டியதும்….
அந்தக் கால
சிறுவர்கள்…
ஆடிய ஆட்டமும் …
விளையாடிய
விளையாட்டும்.
கிடைத்திடுமோ!
இந்த கால
சிறுவர்களுக்கு.
–
அது ஒரு பொற்காலம்..!
233