எதிரிக்கு எதிரி நண்பராக கூட்டு சேர்ந்த ரஜினி.. தனுசை பழிவாங்க தலைவர் போட்ட பிளான் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலயாவது நடித்து விட வேண்டும் என்று பல நடிகர்கள் ஆசையுடன் சுற்றி வருகிறார்கள். அந்த வகையில் கிடைக்கிற கேப்பில் எல்லாம் அவர்களுடைய ஆசையை பொது இடங்களில் வெளிப்படுத்துகிறார்கள். அதிலும் சில நடிகர்கள் ரஜினி தான் எங்களுடைய மானசீக குரு என்று நினைத்து அவருடன் சேர்ந்து நடிக்கும் நாட்களை எண்ணிக்கொண்டு வருகிறார்கள்.
அதில் தனுஷ், லாரன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ரொம்பவே மும்மரமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் தனுசுக்கு சில இடங்களில் அந்த வாய்ப்பு கிடைத்தும் ரஜினி அதை மறுத்திருக்கிறார். அதே மாதிரி லாரன்ஸ்க்கும் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்தாமல் ரஜினியிடமே வாலாட்டியதால் கிடைத்த வாய்ப்பு கைநழுவி விட்டது.
அடுத்தபடியாக சிவகார்த்திகேயன், ஜெயிலர் படத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அதை ரஜினி பெரிதாக விரும்பவில்லை. அதனால் இவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் தற்போது தனுசை பழிவாங்கி சரியான பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இவருடைய எதிரியான சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்து இருக்கிறார்.
ரஜினிக்கு ஓப்பனிங் சாங் வைத்த முதல் படம்.. இருந்த கெட்ட பெயர் மொத்தத்தையும் அழித்துக் காட்டிய தலைவர் அதாவது எதிரிக்கு எதிரி நண்பர் என்ற முறையில் ரஜினி, தனுசை பழிவாங்க பிளான் பண்ணி இருக்கிறார். அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகும் தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு சம்மதத்தை கொடுத்து இருக்கிறார். ஆரம்பத்தில் லோகேஷ் இதைப் பற்றி ரஜினி இடம் கேட்ட பொழுது உடனே ஓகே சொல்லவில்லை.
அதன் பின் என்ன நினைத்தாரோ சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தால் தனுசுக்கு வலிக்கும் என்று வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஏனென்றால் தனுசுக்கு சுத்தமாக சிவகார்த்திகேயனை கண்டாலே பிடிக்காது. இதை தெரிந்ததனால் அவரை கடுப்பாக்கி பார்க்க வேண்டும் என்பதற்காக ரஜினி பிளான் பண்ணி இருக்கிறார்.
அதனால் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகும் படத்தில் முக்கியமான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது சிவகார்த்திகேயன் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆகி இருப்பதால் அவரை கைகொடுத்து தூக்கும் விதமாக ரஜினி முயற்சி எடுக்கப் போகிறார்.