இப்போது பெரிய நடிகர்கள் கையில் கூட இவ்வளவு படங்கள் இருக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறார் லாரன்ஸ். தன்னை தேடி வரும் இயக்குனர், தயாரிப்பாளர்கள் இடம் கால்ஷீட் கொடுத்து நிற்கக் கூட நேரமில்லாத அளவுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தான் சம்பாதிக்கும் பணத்தை தனது தொண்டு நிறுவனத்திற்காக செலவு செய்து வருகிறார். மேலும் இப்போது தன்னுடைய சம்பாத்தியம் தனது ஆசிரமத்திற்கு போதுமானதாக உள்ளதால் யாரும் உதவ வேண்டாம் என்றும் சமீபத்தில் லாரன்ஸ் வேண்டுகோள் வைத்திருந்தார். இவ்வாறு லாரன்ஸுக்கு ஏறுமுகம் என்றாலும் அவருடைய படங்கள் வெற்றி பெறுகிறதா என்றால் கேள்விக்குறி தான்.அதாவது 2008இல் இருந்த தொடங்கி 2023 வரை எடுத்துக்கொண்டால் அவரது ஹிட் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் குறிப்பாக மிகப்பெரிய படம் என்றால் அந்த லிஸ்டில் காஞ்சனா மட்டும் தான் இடம் பெறுகிறது. அதன் பிறகு தொடர் பிளாப் படங்களை மட்டுமே லாரன்ஸ் கொடுத்து வருகிறார். அதுவும் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படமான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடித்திருந்தார். படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு போகாமல் படு மொக்கை வாங்கியது. ஆனால் இப்போது அவரது கேரியர் பீல்ட் அவுட் ஆகாமல் இருக்க சற்று ஒரு ஆறுதலாக அமைந்திருக்கிறது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம். அதாவது எஸ்ஜே சூர்யா இந்த படத்திற்கு பக்கபலமாக அமைந்தாலும் லாரன்ஸும் தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். தீபாவளி ரேசில் படு பயங்கரமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வெற்றியை லாரன்ஸ் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவருடைய ரூட்டை மாற்றினால் தான் முடியும் என்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிய அளவில் போகாத நிலையில் வில்லன் கதாபாத்திரம் அவருக்கு பக்காவாக பொருந்தும். ஹீரோவாக ஜெயிக்க முடியாத நடிகர்கள் வில்லனாக பட்டையை கிளப்பி வருகிறார்கள். சொல்லப்போனால் விஜய் சேதுபதி கூட ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் வில்லனாக நடித்து பெயரை தட்டிச் சென்றார். ஆகையால் லாரன்ஸ் கொஞ்சமும் தயங்காமல் இந்த வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால் அவரது சினிமா கேரியர் பிரகாசமாக அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் இன்னும் சில வருடங்களிலேயே ஃபீல்ட் அவுட் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது.
15 வருடங்களாக லாரன்ஸை பிடித்து ஆட்டம்; கெட்ட நேரம்.. ரூட்டை மாற்றினால் தான் பிழைக்கலாம்
217
previous post