சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, இலங்கையின்; நுகர்வோர் தொழிற்துறையில் முன்னணி நிறுவனமாக நீடித்துத்திகழ்வதோடு, கணினி சந்தைப் பிரிவில் தனது நிலையை மேலும் பலப்படுத்துமோர் நோக்குடனும், தனது மூலோபாய நகர்வுடனும், கடந்த காலங்களில் DELL, ASUS, MSI மற்றும் Huawei மடிக்கணனி நாமங்களை தன் தரவரிசையுடன் இணைத்துள்ள சிங்கர், தற்போது உலகளவில் புகழ்பெற்ற‘ Acer’ வர்த்தக நாமத்தினையும் இணைத்துக்கொண்டுள்ளமையை பெருமையுடன் அறியத்தருகின்றது.
சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, இலத்திரனியல் பொருள் நாமங்களிடையே சந்தையில் முன்னணியில் திகழ்வதுடன், நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் நம்பகமான தொழில்நுட்பத் தீர்வுகளையும் வழங்கி வருகின்றது.
Acer மடிக்கணினிகளின் அறிமுகமானது, பல்வேறு வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, பரந்த அளவிலான தேர்வுகளை வழங்கக்கூடியமை, நிறுவனத்தின் அர்ப்பணிப்பினை மேலும் உறுதிசெய்துள்ளது.
“எங்கள் Desktop கணனிகள் மற்றும் மடிக்கணனிகளின் விரிவான தேர்வுகளிடையே, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற Acer வர்த்தக நாமத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நாம் நன்கறிந்துள்ளதோடு, காலத்துடன் வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களை வழங்குவது மட்டுமல்லாமல், விற்பனைக்குப் பிந்தைய சேவைகளுடன், மலிவு விலையில் சலுகைகளையும் வழங்குவதே எமது நோக்காகும். எமது தரவரிசையில் Acer மடிக்கணினிகளும் இணைந்துள்ளமை, எம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை மட்டுமே வழங்குவதில் எங்களின் உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகின்றது,” என சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா கருத்து தெரிவித்தார்.