469
கோடிக் கண்கள்-
சூழ்ந்திருக்க
உலக கோப்பையிலிருந்து
வழிகிறது…
பலஸ்தீனர்களின் இரத்தம்.
பறக்கும்-
பந்துகளிலிருந்தது
புறப்பட்டு வருகிறது
பாலகர்களின்
உயிர் விளையாட்டு.
இருண்டு கிடக்கிறது-
உலக மைதானம்
குருட்டு நடுவர்களின்
திருட்டு பார்வையில்.
அதிர்வுகள் இல்லாமலே
பூமி பிளக்கிறது
கட்டிடங்களின்
சரிவுகளோடு
கடவுளுக்கும்
பயமில்லாமல்.
எடுக்கப்படும்-
உயிர்களிலிருந்தது.
பிரிக்கப்படுகிறது
மொழியும் மதமும்.
நாம் இறந்த காலத்தில்
பயணிக்கிறோம்
அவர்கள் நிகழ்காலத்தில்
மரணிக்கிறார்கள்.