பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். கடந்த மாதம் இவர் நடிப்பில் தேஜஸ் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். முதல் நாளிலிருந்தே இந்தப் படத்துக்குக் கூட்டம் வரவில்லை. திரையரங்குகளில் கூட்டம் வராததால் அந்த படத்தை நீக்கிவிட்டனர். அதுமட்டுமின்றி கங்கனா ரனாவத் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2, தாக்கட், தலைவி, பங்கா, ஜட்ஜ்மென்டல் ஹே கியா, சிம்ரன், ரங்கூன், கட்டி பட்டி, ஐ லவ் நியூயார்க் போன்ற படங்களும் தோல்வியை சந்தித்தது. இவர் நடிக்கும் படங்கள் தொடர் தோல்வியை சந்திப்பதால் கவலையடைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தொடர்ந்து 10 படங்கள் தோல்வியடைந்த நிலையில், சோதனையிலும் சாதனை படைத்துள்ளார் கங்கனா. தொடர் 10 படங்கள் தோல்வி கொடுத்து வேறு யாரும் புரியாத சாதனையை இவர் செய்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சோதனையில் சாதனை படைத்த கங்கண ரனாவத்..
319