ரன்வீர் சிங்கை காதலித்தபோது பிற ஆண்களுடன் கேஷுவல் டேட்டிங் சென்றதாக கூறிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை சமூக வலைத்தளவாசிகள் விளாசுகிறார்கள். இந்நிலையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு அவரவர் படங்களில் பிசியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் ரன்வீர் சிங், தீபிகா இடையே பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் விவாகரத்து பெறக்கூடும் என்றும் வட இந்திய மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விவாகரத்து பேச்சு அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் ரன்வீர் சிங்கும், தீபிகாவும் கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் தங்களின் காதல், திருமணம் பற்றி இருவரும் பேசியிருக்கிறார்கள்.கரணிடம் தீபிகா படுகோன் சொன்ன ஒரு விஷயம் தான் சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் தீபிகா கூறியதாவது,
சில காலம் சிங்கிளாக இருக்க விரும்பினேன். ஏனென்றால் என் வாழ்க்கையில் சில கடினமான உறவுகளில் இருந்து வெளியே வந்தேன். இனி யாருடனும் நெருக்கமாக இருக்கக் கூடாது, கமிட் ஆகக் கூடாது என்கிற மனநிலையில் இருந்தேன்.
அதன் பிறகு ரன்வீர் வந்தார். அதனால் அவர் ப்ரொபோஸ் செய்யும் வரை நான் கமிட் ஆகவில்லை. அந்த நேரத்தில் நாங்கள் பிறரை டேட் செய்ய அனுமதி இருந்தது. கேஷுவல் டேட்டிங் செய்தோம். இருந்தாலும் மீண்டும் மீண்டும் நாங்கள் ஒன்று சேர்ந்தோம் என்றார்.ரன்வீர் சிங்கை காதலித்தபோது பிறரை டேட் செய்ததாக தீபிகா கூறியதை பார்த்தவர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் விளாசுகிறார்கள். இந்நிலையில் முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு காபி வித் கரண் நிகழ்ச்சியில் ப்ரியங்கா சோப்ராவுடன் கலந்து கொண்ட தீபிகா படுகோன் தனக்கு கேஷுவல் டேட்டிங்கே பிடிக்காது என்ற வீடியோவை தேடிக் கண்டுபிடித்து ஷேர் செய்து வருகிறார்கள் சமூக வலைத்தளவாசிகள்.முன்னதாக கரணிடம் தீபிகா கூறியதாவது, எனக்கு யாரையும் கேஷுவலாக டேட் செய்யத் தெரியாது. அட்டாச் ஆகாமல் சும்மா டேட் செய்வது எப்படி என எனக்கு தெரியவில்லை. அதென்ன கேஷுவல்னு தெரியவில்லை. அப்படி செய்வது நம் கலாச்சாரத்தில் இல்லை என்றார்.