பிரபல இளம் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி இருவரும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இவர்கள் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின. இந்நிலையில், நடிகை அதிதி ராவுக்கு பிறந்தநாள்.
இதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக நடிகர் சித்தார்த் அதிதியை தன்னுடைய பொண்டாட்டி என குறிப்பிட்டு கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார்.
மிகவும் அழகான அந்த கவிதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
இந்த கவிதைக்கு அதித்தி என்ன பதில் கொடுத்திருக்கிறார் என்பதுதான் இதில் சுவாரசியமே.
அப்படி சித்தார்த் என்ன கவிதை எழுதினார் அதிதி அதற்கு என்ன பதில் கொடுத்தார்..? வாருங்கள் பார்க்கலாம். சித்தார்த் எழுதிய கவிதையானது, அவள் அழகானவள் அல்லவா..? பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி.. என்னோடு இருப்பதற்கு நன்றி.. உலகின் ஒவ்வொரு துணுக்கிலும் உன்னுடைய அருள் தூவி பறக்கிறது உன்னுடைய பேச்சுக்களும் சிரிப்புகளும் காற்றை நிரப்புகின்றன.. உன் முகத்தில் சிரிப்பை பார்ப்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்..