நடிகை ஸ்ரீதிவ்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் பற்றி வாய் திறந்து இருக்கிறார். அதில் அவர் பேசிய விஷயங்கள் உங்களுக்கு திருமணம் எப்போது நடக்கும்..? அப்படி நடந்தால்.. அது காதல் திருமணமாக இருக்குமா..? அல்லது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்குமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகை ஸ்ரீதிவ்யா, என்னுடைய திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும்.
நான் என்னுடைய காதலனைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். நிச்சயமாக விரைவில் அதனை உங்களுக்கு அறிவிப்பேன் என கூறியிருக்கிறார். நடிகைகள் பலரும் திருமணம் பற்றி பேச்சு எடுத்தாலே அதனை தவிர்த்து விடும் நிலையில் நடிகர் ஸ்ரீதிவ்யா தன்னுடைய காதலரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று வெளிப்படையாக பேட்டியில் போயிருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.
அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை. தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், தன்னுடைய திருமணம் பற்றிய கேள்விக்கு வெளிப்படையாக பதில் கொடுத்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. இவருடைய இந்த பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.