நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் குறித்து பலரும் அறியாத ரகசியங்கள் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அவரைப் பற்றிய ரகசியம் என்றால் அவர் மது குடிக்க மாட்டார், புகைபிடிக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால் சுடு தண்ணீர் கூட குடிக்க மாட்டார்.
ஒரு முறை குற்றாலத்திற்கு படப்பிடிப்பதற்காக சென்றிருந்தோம். அங்கே குளிரான சூழல் நிலவியது. அனைவரும் டீ, காபி குடித்து கொண்டிருந்தோம். சிவாவிடம் வேண்டுமா என கேட்டோம்.. ஆனால் அவர் டீ காபி கூட குடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். நான் ஷாக் ஆகிவிட்டேன். என்னங்க நீங்க குடிக்க மாட்டீங்க.. ஸ்மோக் பண்ண மாட்டீங்க.. இந்த கெட்ட பழக்கம் உங்ககிட்ட இல்லன்னு நெனச்சேன். ஆனா, டீ, காபி கூடவா குடிக்க மாட்டீங்க..? சுடு தண்ணீராவது குடியுங்கள் என்று கேட்டோம் அதுவும் வேண்டாம் என்று கூறி விட்டு கிரீன் டீ மட்டும் குடித்தார். ஒரு நடிகராக போதைப்பழக்கம் கிடையாது புகைப்பழக்கம் கிடையாது.
ஆனால், டீ காபி கூட குடிக்க மாட்டார் என்று அப்போதுதான் எனக்கு தெரியும். தன்னுடைய உடல் நலனில் அக்கறை மிகுந்த ஒரு நபர் சிவகார்த்திகேயன். அதிகமாக இனிப்புகள் சாப்பிடுவார், வாழைப்பழம் அவருக்கு மிகவும் பிடித்த பழ வகை, உணவில் பிரியாணி என்றால் வெளுத்து கட்டுவார்.. உணவுகளை விரும்பி சாப்பிடுவார் ஆனால் அளவாகவே சாப்பிடுவார். இது தான் சிவகார்த்திகேயன் குறித்து எனக்கு தெரிந்த ரகசியம் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.