நடிகை பிரியங்கா மோகன் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் இந்த வெப் சீரிஸில் முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சினிமாவில் குடும்பப்பாங்கன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை பிரியங்கா மோகன் வெப் சீரிஸில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழில் டாக்டர், டான் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்றவர் பிரியங்கா மோகன்.
இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தொடர்ந்து எதற்கும் தெரிந்தவன் என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா மோகன் திரைப்படங்களில் அளவான கிளாமர் காட்டி தான் நடித்து வருகிறார்.
தெலுங்கு திரைப்படங்களில் கிளாமரான காட்சிகள் நடித்திருக்கிறார் என்றாலும் கூட இதுவரை நீச்சல் உடையில் நடித்தது கிடையாது.
இந்நிலையில், முதன்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸில் இன்னும் சில முன்னணி நடிகைகள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கிரைம் திரில்லர் ஜானரில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.அனல் பறக்கும் இந்த வெப் சீரிஸில் நீச்சல் உடையில் நடிப்பதற்காக பிரியங்கா மோகனுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இது குறித்து வெப் சீரிஸ் குழுவோ அல்லது பிரியங்கா மோகன் தரப்பு எந்த ஒரு அதிகாரப்பூர்வறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகை பிரியங்கா மோகன் நீச்சல் உடையில் பார்க்க வலி மேல் விழி வைத்து ஏக்க பெரு மூச்சு விடுகிறார்கள் அம்மணியின் ரசிகர்கள்.