Essilor இன் இலங்கைப் பிரிவான Essilor Lanka, வில்லைகளில் உலகின் முதல் தர மற்றும் புதுமைக்கான தனது உறுதிப்பாட்டை மேம்படுத்தப்பட்ட ஆய்வுகூடத்தை உருவாக்கியதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்துக்கான இந்த முதலீடு, அதன் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த தரமான தயாரிப்புகளை வழங்குவதற்கான Essilor Lanka இன் உறுதியான அர்ப்பணிப்புடன் இயைந்து செல்கின்றது. மேம்படுத்தப்பட்ட வசதி தற்போது சர்வதேச உற்பத்தித் தரங்களுக்கு இணையாக இயங்கி வருவதால், நிறுவனம் கண் பராமரிப்புத் துறையில் சிறந்து விளங்குவதற்கான புதிய அளவுகோலை வகுத்துள்ளது.
ஒரு தசாப்த கால செயல்பாடுகளைக் கொண்டாடும் வகையில், Essilor Lanka தனது சமீபத்திய Crizal வில்லைகள் மற்றும் Presbyopes -Varilux Comfort Max வில்லைகளின் அண்மைய வரிசையை அறிமுகப்படுத்தியது. Essilor Lanka இந்த 2 கண்டுபிடிப்புகள் மூலம் அனைத்து வயதினருக்கும் மேம்பட்ட பார்வைத் திருத்தம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1849ஆம் ஆண்டில் பாரிஸில் ஒரு கைவினைத் தொழிலாக கண்ணாடி தயாரிக்கத் தொடங்கிய Essilor குழுமம், புதுமையான வணிக மாதிரிகள் மூலம் உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வடிவமைத்து, தயாரித்து விநியோகிப்பதற்கான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. . இன்று, Essilor 70 நாடுகளில் பரவியுள்ள 67,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் அதே வேளையில், உலகில் உள்ள 7.4 பில்லியன் மக்களின் பார்வை ஆரோக்கியத்தை சரிசெய்து பாதுகாப்பதற்கான தீர்வுகளை வழங்குகிறது.