629
கொழும்புத் துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய சுங்க வரியில்லா வணிக வளாக வர்த்தகத்தை நடத்துவதற்காக முதலீட்டாளர் ஒருவர் குறைந்தபட்சம் 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும். இதேவேளை, சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகத்தை நடத்த முதலீட்டாளர் ஒருவர் குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும்.