அண்ட வெளியெங்கும் நீ
அறிவியல் துணை கொண்டு
ஆய்வு செய்தாலும் மானிதா
உண்டு வாழ தினம்
உணவில்லையெனில்
உனக்கில்லை எதிர்காலம்!
இன்று கிடைக்கிறதே என்று
எளிதாய் நீ எண்ணி விடாதே
நாளையே உணவுப் பஞ்சம் நம்
வாயிற்றைக் கடிக்கக் கூடும்!
மள மள வென
சிதைக்கப்படுகின்றன
வளம் மிக்க நல்ல
விளை நிலங்கள்!
வேறு தொழில்கள்
ஆயிரம் வளர்க்கின்றோம்
உணவை காக்க
மறந்து போகின்றோம்!
காற்றும் நீரும் கிடைத்த பின்
உணவுதானே நம் உயிரின்
மூலம் என்பதை தெளிவாய்
உணரத் தவறுகின்றோம்!
நாளையாவது விடியட்டும்
பசுமைக்
கனவுகளோடு.
வயல் வெளிஎங்கும்
பசுமை பரவட்டும்.
எதிர்கால எம்வாழ்வு
புதிதாக மலரட்டும்.
பசுமைக்கு உரமிடுவோம்
பசுமைக்கு உரமிடுவோம்
539
previous post