சிவகார்த்திகேயேனின் ‘அயலான், ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள ‘லால் சலாம்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
‘லால் சலாம்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘அயலான்’ படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று கூறப்பட்ட நிலையில் இந்தப் படமும் பொங்கல் போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில்,பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம்புரொடக்ஷனும் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
தங்கலான் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இருக்கும். 2024-ல்சிறந்த படமாக அமையும். நடிகர் விக்ரமுக்கு அதிக அங்கீகாரம் கிடைக்கும்” என்று இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.