சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தில் எஸ்ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். வட சென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக மொட்டை தலை லுக்குடன் வலம் வருகிறார் தனுஷ். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘மார்க் ஆண்டனி’ கொடுத்த பிரம்மாண்ட வெற்றி.. ‘லியோ’ பிரபலத்துடன் இணைந்த விஷால்: அடுத்த சம்பவம்.!
இந்நிலையில் இப்படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ‘தனுஷ் 50’ படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடையவுள்ள நிலையில், தனது அடுத்த படத்தில் நடிப்பதற்காக தயார் ஆகி வருகிறார் தனுஷ். தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இப்படத்தை இயக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது .
தனுஷ் 51 படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. பான் இந்திய அளவில் உருவாகவுள்ள இப்படத்தில் பிரபல நடிகர் நாகர்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாரார். இந்நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவலாக ‘D51’ படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ‘கேப்டன் மில்லர்’ படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீசாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.