ரஜினி ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார். ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம், ஞானவேலின் படம் , லோகேஷ் கனகராஜின் படம் என பிசியாக இருக்கின்றார் ரஜினி . இப்போதே இப்படி என்றால் 80 காலகட்டங்களில் ரஜினி நிற்கக்கூட நேரமில்லாமல் படங்களில் நடித்து வந்தார். அந்த காலகட்டங்களில் தன்னால் குடும்பத்தின் நேரம் செலவிட முடியாமல் போனதை எண்ணி ரஜினி வருந்துவாராம். இதனை அவருடன் லால் சலாம் படத்தில் இணைந்து நடித்த லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.ரஜினி இன்றும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். கடந்த பார்த்து ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் ரஜினி அந்த இடத்தை இன்றுவரை தக்கவைத்து வருகின்றார். அதற்கு மிக முக்கிய காரணம் அவரின் கடுமையான உழைப்பு தான்.என்னதான் 72 வயதானாலும் இன்றளவும் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் ரஜினி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாஸ் ஹிட்டடித்தது. இதையடுத்து தன்னை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார் ரஜினி. கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் நடிப்பில் வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை. எனவே ரஜினியின் படங்கள் இனி ஓடாது என விமர்சித்த சிலருக்கு ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் ரஜினி பதிலடி கொடுத்தார். இதையடுத்து ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படப்பிடிப்பில் தற்போது ரஜினி பிசியாக நடித்து வருகின்றார். இப்படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜின் தலைவர் 171 திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இதற்கிடையில் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற ரோலில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் ரஜினி.
இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ரஜினியை பற்றி பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் ஒரு பெட்டியில் பேசியுள்ளார். வீரா, சிவாஜி என ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் லிவிங்ஸ்டன் லால் சலாம் படத்திலும் நடித்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது லிவிங்ஸ்டனிடம் ரஜினி பல விஷயங்களை மனம்விட்டு பேசியுள்ளார். என்னவென்றால் தற்போது தான் ரஜினி வருடத்திற்கு ஒரு படம் என நடித்து வருகின்றார்.
ஆனால் 80 மற்றும் 90 காலகட்டங்களில் ஒரு வருடத்திற்கு குறைந்தது ரஜினியின் இரண்டு படங்களாவது வெளியாகும். குறிப்பாக 80 காலகட்டங்களில் ரஜினியின் ஐந்து படங்கள் வரை ஒரே வருடத்தில் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு பிசியாக நடித்து வந்தார் ரஜினி. அந்த காலகட்டங்களில் ரஜினி பொதுவாக அவுட்டோர் ஷூட்டில் தான் இருப்பாராம். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடவே முடியாதாம்.தொடர்ந்து படப்பிடிப்பு இருந்து வந்ததால் ஒரு நாள் கூட தன் பிள்ளைகளுடனும் மனைவிடையுடனும் ரஜினியால் இருக்க முடியாதாம். மேலும் ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவை லதா தான் வளர்த்தாராம். என்னதான் பணம் காசு புகழை சம்பாதித்தாலும் இளம் வயதில் பிள்ளைகளுடன் தன்னால் இருக்கமுடியவில்லையே என கூறி வருத்தப்பட்டதாக லிவிங்ஸ்டன் பேசினார்.இவ்வாறு வெளியில் இருப்பவர்கள் முன்னணி நட்சத்திரங்களை பார்த்து அவர்களுக்கு என்ன கார், பங்களா என வசதியா இருக்காங்க என பேசுவாங்க. ஆனா அவங்களுக்கு தான் கஷ்டம் தெரியும். தன் குடும்பத்தை விட்டு பிரிந்து படப்பிடிப்பே கதி என இருப்பது அவ்வளவு கஷ்டமான விஷயமாகும் என பேசினார் லிவிங்ஸ்டன் என்பது குறிப்பிடத்தக்கது.