லியோ படத்தில் த்ரிஷாவை ஹீரோயினாக நடிக்க வைத்தது ஏன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அவர் சொல்வதும் சரி தான் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜய் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் லியோ படத்தின் ஹீரோயினாக த்ரிஷாவை தேர்வு செய்தது ஏன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ படம் தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.
லோகேஷ் படத்தில் விஜய்யின் மனைவியாக நடித்திருக்கிறார் த்ரிஷா. தன் படத்திற்கு த்ரிஷாவை தேர்வு செய்தது ஏன் என தற்போது தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய்க்கு ராசியான ஹீரோயின்களில் ஒருவர் த்ரிஷா என்பது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த கெமிஸ்ட்ரிக்காக தான் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்ததாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
விஜய், த்ரிஷா இடையேயான கெமிஸ்ட்ரி யாருக்கு தான் பிடிக்காது. அப்படி இருக்கும்போது லோகேஷ் கனகராஜ் மட்டும் விதிவிலக்கா என்ன? லியோ படத்தில் வரும் அன்பெனும் ஆயுதம் பாடலின் லிரிக்கல் வீடியோவை பார்த்த அனைவரும் கில்லி படம் பற்றி பேசுகிறார்கள். கில்லி படத்தில் காதலித்து வந்த சரவண வேலுவும், தனலட்சுமியும் திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டார்கள். முத்துபாண்டி போய் புது வில்லன் வர அவரை எப்படி தொம்சம் செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார் விஜய் என்பதே லியோ படத்தின் கதை என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
லியோ படத்திற்காக த்ரிஷாவின் போஸ்டரை பார்த்தபோதே பலருக்கும் கில்லி தனலட்சுமி தான் நினைவுக்கு வந்தார். அன்பெனும் ஆயுதம் பாடலை பார்த்ததுமே இது வேலுவும், தனலட்சுமியும் தான் என அனைவரும் கூறினார்கள். இந்நிலையில் லியோ படம் எல்.சி.யு.வில் வருவது உறுதியாகிவிட்டது. லியோவில் ஃபஹத் ஃபாசில் நடித்திருப்பதை விஜய்யின் மகனாக நடித்திருக்கும் மேத்யூ தாமஸ் தெரிவித்துள்ளார்.