876
நடிகர் விஷால், மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து தற்போது அவரது 34வது படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், கிராம மக்கள் கேட்ட கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறார் நடிகர். 2004ல் செல்லமே என்னும் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விஷால். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் SJ சூர்யா இணைந்து நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதுமட்டுமில்லாமல், கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.