சிவகார்த்திகேயனிடம் உனக்கு யாருடா ரூ. 5 லட்சம் தருவாங்க என்று அவரின் அம்மா கேட்டது குறித்து தற்போது பேசப்படுகிறது. சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். படம் ஒன்றுக்கு ரூ. 25 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். அவர் சின்னத்திரையில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் செய்தது குறித்து ஒரு முறை தெரிவித்தார். அது பற்றி தற்போது ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் வென்றதும் முதல் வேலையாக அம்மாவுக்கு போன் செய்து சொல்லியிருக்கிறார். அம்மா நான் ஜெயிச்சுட்டேன், எனக்கு பரிசுத் தொகையாக ரூ. 5 லட்சம் கிடைக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதை கேட்ட அம்மாவோ, போடா உனக்கு யாரு ரூ. 5 லட்சம் கொடுக்கப் போகிறாங்க. அந்த எம்.பி.ஏ. படிப்பு என்னாச்சு, ஒழுங்கு மரியாதையா படிக்கிற வேலையை பாருடானு சொல்லி போனை வைத்துவிட்டாராம்.
ரூ. 5 லட்சம் சம்பளமே கிடைக்காது என்று நினைத்த நிலையில் இன்று பல கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வந்தாலே இவர் டிவி நடிகர் தானே என்கிற பேச்சு இருக்கும். அதை எல்லாம் தாண்டி சாதிப்பது பெரிய விஷயம். அதை தான் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.ஒரு நடிகராக பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் ஆவார். மேலும் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் பாடகி ஆவார். அவர் பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல் குணமே, தான் மட்டும் முன்னேறினால் போதும் என நினைக்காதது தான். தன்னை சுற்றி இருக்கும் நண்பர்களும் தன்னை போன்றே முன்னேற வேண்டும் என நினைக்கிறார்.அவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிக்கும் அந்த எஸ்.கே. 21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துக் கொண்டிருக்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால் அவரின் கதாபாத்திரம் நிச்சயம் வெயிட்டானதாக தான் இருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் எஸ்.கே. 21 பட பூஜையின்போது ராஜ்குமார் பெரியசாமியும், சாய் பல்லவியும் மாலையும் கழுத்துமாக இருந்த புகைப்படம் அண்மையில் வைரலானது. அதாவது சாய் பல்லவிக்கும், ராஜ்குமார் பெரியசாமிக்கும் திருமணமாகிவிட்டதாக பேசப்பட்டது. அதை பார்த்த சாய் பல்லவியோ, இது வெறும் வதந்தி என எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்தார். அடுத்தடுத்து அவர் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு வரும் நேரத்தில் இப்படியொரு வதந்தி பரவியது.
இதற்கிடையே ராஜ்குமார் பெரியசாமிக்காக புது ஹேர்ஸ்டைல் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்று தான் மாவீரன் பட நிகழ்ச்சிகளில் எல்லாம் குல்லா அணிந்து வந்தார்.மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படம் சூப்பர் ஹிட்டானது. தன் அபார நடிப்பால் படத்தை தன் தோள்களில் தாங்கினார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் அயலான் படத்தை பார்க்க பெரியவர்களும், குட்டீஸ்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போதைக்கு எஸ்.கே. 23 என அழைக்கப்படும் அந்த படம் மூலம் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் தமிழ் திரையுலகிற்கு வருகிறார்.