லியோ கேர்கடர் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் லோகேஷ் கனகராஜின் பேட்டிகள் தான் இணையம் முழுவதையும் ஆக்கிரமித்து வருகின்றன. ‘லியோ’ பட ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், படம் குறித்த பல தகவல்களை பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் லேட்டஸ்ட் இன்டர்வியூ ஒன்றில் திரிஷா, பிரியா ஆனந்த் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மாநகரம்’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கைதி, மாநகரம், விக்ரம் படங்களை தொடர்ந்து தற்போது பெரும் எதிர்பார்ப்புடன் ‘லியோ’ படத்தை இயக்கி முடித்துள்ளார். ‘மாஸ்டர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக லியோவில் இணைந்துள்ளனர். கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தப்படத்தின் ரிலீஸ் திகதி நெருங்கி வருகிறது. இதனால் படம் குறித்த பல தகவல்களை தொடர்ச்சியாக பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் இணையத்தில் வைரலாகும் மீம்ஸ் குறித்து கேட்கப்பட்டது. அப்போது திரிஷா கேரக்டரை ‘செல்லத்த உயிரோட விட்ரு அண்ணா’ என வைரலாகும் மீம்சை காட்டி லோகேஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் படம் ஆரம்பித்ததில் இருந்து இதைத்தான் என்கிட்ட சொல்லிட்டு இருக்காங்க. காஷ்மீர் ஷுட்டிங்ல இருந்தப்ப திரிஷா, பிரியா ஆனந்தே என்கிட்ட இதை கேட்டாங்கன்னு நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேருல யாராவது சாக போறோமான்னு கேட்டாங்க. இப்ப வரைக்கும் எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லை. ஆனால் ரசிகர்களோட எதிர்பார்ப்பை எல்லாம் பார்க்கும் போது ரெண்டு பேருல யாரையாவது ஒருத்தரை கொன்னாதான் கரெக்ட்டா இருக்கும் நினைக்கிறேன் என கூறியுள்ளார். அவரின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் அப்போ கண்டிப்பா படத்துல ரெண்டு பேருல ஒருத்தரை லோகேஷ் கனகராஜ் போட்டு தள்ளிருப்பாரு போல என கூறி வருகின்றனர்.
‘லியோ’ படத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், திரிஷா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் படத்தில் கணவன், மனைவியாக நடித்துள்ளது டிரெய்லரிலே கன்பார்ம் ஆகியுள்ளது. மேலும் இவர்கள் இருவர் பற்றியும் பேசிய லோகேஷ் கனகராஜ், ரெண்டு பேரையும் 40+ ஆக காட்டுவது தான் கஷ்டம். ரெண்டு பேருக்குமே வயசு ரிவர்ஸ்ல போகுது என தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் இந்த பேட்டிகள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நாங்க ரெண்டு பேருல யாராவது சாக போறோமா.?: லோகேஷிடம் கேட்ட திரிஷா, பிரியா ஆனந்த்.!