இலங்கையின் பாரிய நுகர்வோர் சில்லறை விற்பனையாளரான சிங்கர் ஸ்ரீலங்கா, அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிங்கர் ரெட் ‘ ஹதவதே தாகி’ [‘’உள்ளத்தின் பரிசு”] பிரத்தியேக லோயல்டி அதிர்ஷ்ட சீட்டிழுப்பினை அண்மையில் நிறைவு செய்தது. லோயல்டி வரிசையின் பலன்களை அனுபவிக்கும் அதே வேளையில், வாடிக்கையாளர்கள் அற்புதமான பரிசுகளை வெல்வதற்கான ஒரு நம்பமுடியாத வாய்ப்பை வழங்கியது.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 31, 2023 வரை நடைபெற்ற இந்த அதிர்ஷ்ட குலுக்கல் சீட்டிழுப்பு நாடு முழுவதும் உள்ள அனைத்து சிங்கர் லோயல்டி வாடிக்கையாளர்களுக்கும் திறந்ததாக அமைந்தது . நாடு முழுவதும் உள்ள எந்த சிங்கர் காட்சியறையிலும் தங்களுடைய ரெட் லோயல்டி புள்ளிகளை மீட்டெடுப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தாமாகவே இந்த சீட்டிழுப்பில் பங்குபற்றினர்.
ஒவ்வொரு மீட்டெடுப்பும் வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களை வெல்வதற்கான வாய்ப்பை வழங்கியது, Deluxeமற்றும் Premier வாடிக்கையாளர்கள் ஒருமீட்புக்கு ஒரு வெற்றி வாய்ப்பைப் பெறுகிறார்கள் மற்றும் VIP வாடிக்கையாளர்கள் ஒரு மீட்புக்கு இரண்டு வெற்றி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.
ஹதவதே தாகி’ [‘’உள்ளத்தின் பரிசு”] குலுக்கல் சீட்டிழுப்பில் மனதை கவரும் பல பரிசில்கள் வழங்கப்பட்டன.
பாரிய பரிசில் வெற்றியாளரான பேராதனையைச் சேர்ந்த பேராசிரியர் மில்டன் ராஜரத்ன, ரூ. 1 மில்லியன் பெறுமதியான சிங்கர் மர தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற குறிப்பிடத்தக்க வெகுமதிகளை வென்றெடுத்தார்.