1.1K
பாதை தெரியாமலே பாவை உனைப்
பார்த்தேன்- பாதி நிலவொளியில்
என் இதயம் தனை சேர்த்தேன்
காதல் என அறியாமலே
உன்னில் நான் எனைப் புதைத்தேன்
யாவும் மாறிச் செல்லுமென
மாற்றம் தனைக் கேட்டேன்
ஜீவன் அதில் மூழ்கிப் பின்னே
எழுகையிலே தெரிந்திருக்கும்
எது நியாமென்று புரிந்திருக்கும்
புதிதாக புதிர் போடும் புரியாத
புதிராக உனைக் கண்ட
நொடிப்பொழுது நியாமென நினைக்கவில்லை
நிழலென்றும் தோன்றவில்லை
வழி கண்ட பின் நானும் ஒரு
போதும் அறியவில்லை எதுவென்று
கேட்கவில்லை முழுக்கதையாக
இதை கேட்க எதுவென்று
என் மனங்கேட்க வாழ்வொன்று
வாழ இங்கு நெடுந்தூரப் பயணம்
செய்து உயிர் இரண்டு ஒன்றாக
கலந்ததுவே